வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா

வேலூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் கார்த்திகேயனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கார்த்திகேயன் வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் ஏற்கெனவே 14 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது கார்த்திகேயனையும் சேர்த்து 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *