பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனம், அமெரிக்காவிற்கு விமானங்களை இயக்குவதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்தில் ஐரோப்பிய யூனியன், பாகிஸ்தானிய விமான சேவையான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தை சமீபத்தில் தடை விதித்தது. பாகிஸ்தான் விமான சேவையில் பணியாற்றும் விமானிகள், விமான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முறைகேடான வழியை பின்பற்றியதை பாகிஸ்தான் அரசு கண்டறிந்தது. இந்நிலையில் இந்த முடிவினை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டது.
இதையடுத்து, பாகிஸ்தானில் போலியாக பைலட் சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்ததாக பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) கவலை தெரிவித்ததை மேற்கோள் காட்டி இந்த முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.
கடந்த மே மாதத்தில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (பிஐஏ) விமானம் விபத்துக்குள்ளானதில் 97 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சந்தேகத்திற்குரிய விமானிகளின் பைலட் சான்றிதழ்களை பரிசோதித்ததில் பலர் போலி என்பதை பாகிஸ்தான் கண்டுபிடித்தது.