அயோத்தி: உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது.இதையடுத்து, ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை, கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு அமைத்தது. மார்ச்சில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. கட்டுமான பணிகள், மே இறுதியில் துவங்கின. இந்நிலையில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட, அயோத்திக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று சென்றார்.
அப்போது அவர் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாசை நேரில் சந்தித்து கட்டுமான பணிகள் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் ராம ஜென்ம பூமியில் மரக்கன்று ஒன்றை நட்டார்.