அமெரிக்காவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்தி வருகின்றன. மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த வைரசுக்கு உலகிலேயே அதிக பாதிப்புகளை சந்தித்த நாடாக அமெரிக்கா உள்ளது. இதன் காரணமாக டிரம்பின் கோபம் சீனா மீது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 56 ஆயிரத்தை கடந்தது. இதனால், மொத்த பாதிப்பு 28,36,875 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 679 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 1,31,477 ஆக உயர்ந்துள்ளது.


பாதிப்பிலிருந்து இதுவரை 11.91 லட்சம் பேர் மீண்டுள்ளனர்; 15.14 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு நேற்று முதன்முறையாக 50 ஆயிரத்தை கடந்த நிலையில், இன்றும் 50 ஆயிரத்தை கடந்துள்ளதால், மீண்டும் கொரோனா அச்சத்தால் அந்நாட்டு மக்கள் கலங்கி உள்ளனர்.

Source: Dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *