ஆப்கானிஸ்தான், கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் மனித உரிமைகள் அமைப்பினர் 2 பேர் பலி

காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் காபுல் நகரில் மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் பயணம் செய்த காரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 

காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அதில் பயணம் செய்த மனித உரிமைகள் அமைப்பினர் இரண்டு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், ஊழியர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Source:  The Times of India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *