ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், போலீஸ் குறை தீர்க்கும் மைய வாட்ஸ்-ஆப்  எண்ணுக்கு, ஒரு வாலிபரின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பார்வர்டு செய்யப்பட்டு இருந்தது. அப்பிரிவில் பணியாற்றிவரும் முதல்நிலைக்காவலர் கண்ணன் என்பவர் அந்த போட்டோக்களை பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஆண்கள் சிலர் நிர்வாணமாக இருப்பது, பாலியல் உறவு கொள்வது ஆகிய வீடியோக்களை அடையாளம் தெரியாத ஒருவருடைய செல்போன் எண்ணிலிருந்து வந்திருந்தது. போலீசாரின் செல்போன் எண்ணுக்கே தைரியமாக ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பியது யார்? என்பது குறித்து விசாரிக்குமாறு, ராமநாதபுரம் போலீசில், காவலர் கண்ணன் புகார் அளித்தார்.

சைபர் க்ரைம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த செல்போன் எண் கோவையை சேர்ந்த பிரேம் கிரண் என்பவரது பெயரில் இருந்ததை கண்டுபிடித்தனர். வழக்கு பதிவு செய்த பிறகு, நேரடியாக கோவை சென்ற தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 29 வயதான பிரேம் கிரண், பள்ளியொன்றில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றுவதுடன் சொந்தமாக டியூசன் சென்டரும் நடத்தி வருகிறார். சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தில் செயல்படும் இவரது டியூசன் சென்டரில் 40க்கும் அதிகமான மாணவர்கள் படிப்பதாக கூறப்படுகிறது

நண்பர்களுக்கு அனுப்புவதற்கு பதிலாக, தவறுதலாக ராமநாதபுரம் குறைதீர்க்கும் எண்ணிற்கு ஆபாசப்படங்களை அனுப்பியதாக பிரேம் கிரண் ஓப்புக்கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர். ஒருபால் ஈர்ப்பு கொண்ட பிரேம் கிரணிடம், அவரது நண்பர்களில் ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட போலீசாரின் வாட்ஸ் அப் எண்ணைக்கொடுத்து சிக்கவைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆபாசமான, அறுவறுக்கத்தக்க போட்டோக்களை அனுப்பிய ஆசிரியர் பிரேம் கிரண் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் மாவட்ட போலீசார் காவல்நிலைய ஜாமினில் அவரை விடுவித்தனர். இதற்கிடையே, இந்த வழக்கு பின்னணி தெரியாமல், தனது மகனைக் காணவில்லை என்று பிரேம்கிரணின் தந்தை கொடுத்த புகாரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் பிறகு, பிரேம் கிரண் கைது செய்யப்பட்ட விவரம், கணேசனுக்கு தெரிவிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *