அமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு

சீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய செல்போன் செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளதாார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டு தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சீனாவின் டிக்டாக், வீசாட், ஹலோ உள்ளிட்ட சுமார் 106 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருந்தது. இந்தியாவின் இந்த செயலை அமெரிக்கா பாராட்டியது.

இந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், சீன நிறுவனங்களின் செயலிகளான டிக்டாக், வீசாட் ஆகியவற்றை தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இது அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *