தமிழக அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் பலி!

திருச்சி: திருச்சி அருகே அமைச்சரின் பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வாகனம் மோதி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழக காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தனது சொந்த ஊரான சிவகங்கையில் இருந்து சென்னை சென்றுகொண்டிருந்தார். அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வரும் போலீசார் வாகனம், பஞ்சப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விசாரணையில், பலியான முதியவர், எடமலைப்பட்டி ராமச்சந்திர நகரை சேர்ந்த அப்துல் (70) என்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து, பலியான முதியவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *