துப்பாக்கியால் சுட்ட வழக்கில் திருப்போரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது

செங்கல்பட்டு மாவட்டம் செங்காடு பகுதியில் எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும், இமயம் குமார் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று  மாலை வாக்குவாதம் முற்றிய நிலையில் சிலர் ஆயுதங்களால் தாக்க முற்பட்டனர். இதனால் எம்.எல்.ஏ தற்காப்பிற்கு துப்பாக்கியால் சுட்டார். இதில் இமயம்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார், காயத்துடன் பெரும்பாக்கம் குளோபல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கியால் சுட்டதால் இந்த சம்பவம் பரபரப்பானது.

இந்நிலையில் நிலத்தகராறு காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தொடர்புடைய திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் சென்னை அருகே மேடவாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *