ஆந்திராவில் மதுவுடன் சானிடைசர் கலந்து குடித்த 10 பேர் பலி

ஆந்திராவில், மதுவுடன் சானிடைசர் கலந்து குடித்த 10 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால், சிலர் போதைக்காக மாற்றுவழிகளை தேடி வருகின்றனர்.ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் குரிசெடு கிராமத்தில் போதைக்காக, மதுவுடன் சிலர் சானிடைசரை கலந்து குடித்தனர்.

இதில் 10 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் பிச்சைக்காரர்கள் என தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *