கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு தடை; பாஜக புகார்

இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வரும் கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:
நாத்திக கருத்துகளை பரப்புவது போல சிலர் கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் நடத்தி வருகின்றனர். அதில், ஆபாச புராணம் என்ற பெயரில் கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, இது போன்ற கருத்துகளை பரப்பிவருகின்றனர்.
இந்து கடவுளான முருகப் பெருமானை போற்றி, 19ம் நுாற்றாண்டில், கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டுள்ளது. முருகப்பெருமானிடம் மனம் உருக பாடப்பட்டும் பாடல்களை, அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி இருப்பது, தண்டனைக்குரிய குற்றம். அந்த சேனலை நடத்துபவர்களின் நோக்கம், இந்துக்களையும், அவர்கள் வழிபடும் கடவுள்களையும் கொச்சைப் படுத்துவதாகவே உள்ளது. மத மோதல்களை ஏற்படுத்தி, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயலும் மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *