சென்னையில் சூதாட்டம் – நடிகர் ஷாம் உள்பட 12 பேர் கைது

சென்னையில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் வீட்டுக்குள்ளேயே பெரும்பாலானவர்கள் முடங்கியுள்ளனர். இந்தநிலையில், சென்னையில் கஞ்சா, சூதாட்டம் தங்கு தடையின்றி நடப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா பிரபலங்களும் பிசினஸ்மேன்களும் பணம் வைத்து சூதாடுவதாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டிக்கு நேற்றிரவு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முத்து வேல்பாண்டி தலைமையில் நுங்கம்பாக்கம் போலீஸார் நடிகர் ஷாமின் சூதாட்ட விடுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் சூதாடிக் கொண்டிருந்தனர்.

நடிகர் ஷாம் உட்பட 13 பேரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. இதில் நடிகர்கள், சினிமா பிரபலங்கள், பிசினஸ்மேன்கள் கலந்துகொள்வது தெரியவந்தது. ரகசியக் குறியீடுகள், சீக்ரெட் கோடுகள் மூலம் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. பின்னர் 13 பேரும் இரவு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *