ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான மனோஜ் சின்ஹா வியாழக்கிழமை நியமிக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் மாளிகை பத்திரிகையாளர் செயலாளர் அஜய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கிரீஷ்சந்திர முா்மு தனது பதவியை புதன்கிழமை இரவு ராஜிநாமா செய்தாா். அரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் […]