Tag: JAMMU AND KASHMIR

வீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்

பாரமுல்லா மாவட்டத்தின் க்ரீரி பகுதியில் தற்போது நடைபெற்று வந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் போட்டுத்தள்ளியுள்ளனர். ரோந்து சென்ற வீரர்கள் மீது இந்த பயங்கரவாதிகள் தாக்கியதில் இரு சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஒரு காஷ்மீர் காவல் துறை வீரர் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடந்த பிறகு சிஆர்பிஎப்,இராணுவம் மற்றும் காஷ்மீர் காவல்துறை இணைந்த படைப்பிரிவு தேடுதல் வேட்டையை தொடங்கியது. பயங்கரவாதிகளை வெற்றிகரமாக கண்டடைந்த வீரர்கள் அதன் பிறகு நடைபெற்ற […]

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான மனோஜ் சின்ஹா வியாழக்கிழமை நியமிக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் மாளிகை பத்திரிகையாளர் செயலாளர் அஜய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கிரீஷ்சந்திர முா்மு தனது பதவியை புதன்கிழமை இரவு ராஜிநாமா செய்தாா். அரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் […]

காஷ்மீரில் பாஜக பிரமுகர் அவரது தந்தை மற்றும் சகோதரர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

காஷ்மீரின் வடக்கு மாவட்டமான பந்திப்போராவைச் சேர்ந்த ஷேக் வாசிம் பாரி, இவர் பாஜக மாவட்ட தலைவராக இருந்தவர். இவரது சகோதரர் உமர் சுல்தான் , தந்தை பஷீர் அகமது ஷேக். இவர்கள் அப்பகுதியில் கடை வைத்துள்ளனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் மூவரும் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.