Tag: India

சீனாவுடன் ஒப்பந்தம் போட உலக நாடுகள் மறுப்பு, இந்திய ஆலைகளுக்கு பெரிய வாய்ப்பு – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சீனாவுடன் ஒப்பந்தம் போட உலக நாடுகள் மறுத்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை முன்னிட்டு டிக்டாக், ஹெலோ உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.  இதனை கவனித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அவற்றுக்கு தடை விதிப்பது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் […]

பயங்கரவாத அமைப்புகளுக்கு வசதிகள் செய்து தரும் பாகிஸ்தான் – இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் படி அந்நாட்டிடம் உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா.வில் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த கலந்துரையாடல் காணொலி மூலம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய மூத்த அதிகாரி மஹாவீர் சிங்வி பாகிஸ்தான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: மனித உரிமைகளை பாதுகாத்து அதை நிலைநிறுத்துவதற்கு […]

இந்தியாவில் முதலீடு: சீன நிறுவனங்களின் 50 முதலீட்டு பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு

கடந்த மாதம், சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, சீனாவை சேர்ந்த, 59 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு, சீன நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதுகுறித்து, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று […]

அமெரிக்கா வாழ் இந்தியர்கள், திபெத்தியர்கள் மற்றும் தைவான் மக்கள் சீனாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

லடாக் எல்லையில் அத்துமீறும் சீனாவை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.. நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்நாட்டில் வாழும் தைவான் மற்றும் திபெத் நாட்டை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்துவதாகவும், தங்கள் பலத்தை காட்டி அணைத்து நாடுகளையும் மிரட்டுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீனா மீது குற்றம் சாட்டியுள்ளனர். போராட்டத்தின்போது சீனா உலகை அச்சுறுத்தும் புற்றுநோய் என்று தெரிவித்த அவர்கள், சீன […]

எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடி வானொலி மூலம் இன்று மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நிகழ்ச்சியில், இந்தியா தனது எல்லையையும், அதன் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது என்ற நிலையை உலகம் கண்டுள்ளது. லடாக்கில் நமது எல்லைக்குள் நுழைய முயற்சித்தவர்களுக்கு தக்கபதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு எப்போது நிறைவடையும் என மக்கள் பெரும்பாலானோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்ததாக உள்ளது என […]

இந்தியாவில், கடந்த 6 நாளில் 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 509,446 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,276 புதிய கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிக வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 15,689 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 381 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து 295,917 பேர் குணமடைந்து உள்ளனர். […]