Tag: Coronavirus

இந்தியாவில், கடந்த 6 நாளில் 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 509,446 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,276 புதிய கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிக வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 15,689 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 381 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து 295,917 பேர் குணமடைந்து உள்ளனர். […]

சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த களமிறங்கியது கமாண்டோ படை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை இன்று கொரோனாவின் தலைநகர் போல உருவெடுத்து வருகிறது. அந்தளவு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட 5 மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,814ஆக அதிகரித்துள்ளது. ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட […]

நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. விமான சேவை, ரயில் போக்குவரத்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியன் ரயில்வே வெளியிட்ட அண்மை அறிவிப்பின்படி, நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. எக்ஸ்பிரஸ், மெயில், பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் என அனைத்துவிதமான ரயில் சேவைகளும் […]