Tag: China

சீனாவுக்கு எதிராக சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. இது ஹாங்காங்கின் தன்னாட்சியைப் பறிக்கும் செயலாகும் எனக் கூறி அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஹாங்காங்கின் சுதந்திரத்தை பறிக்கும் சீனாவுக்கு நெருக்கடி தரும் வகையில், அமெரிக்க பார்லிமென்டில் முக்கியமான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவும் கண்டிக்கும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதன் மீது தடைகள் விதிப்பதற்கு […]

ராணுவத்தின் வீரத்தை பார்த்து 130 கோடி மக்கள் பெருமை – லடாக்கில் ராணுவத்தினருடன் பிரதமர் மோடி உற்சாக பேச்சு

ஜூன் மாத மத்தியில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே எல்லைப் பகுதியில் நடந்த மோதலின் பின்பு பிரதமர் நரேந்திர மோடி, இன்று திடீர் பயணமாக லடாக் சென்றார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உடன் இருந்தனர். லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் அவர் ராணுவத்தினருடன் உரையாற்றினார். பலகீனமாக உள்ளவர்களால் அமைதிக்கான முயற்சியை ஒருபோதும் தொடங்க முடியாது. உலகப் போரோ அல்லது அமைதியோ, […]

பூட்டானில் நிலத்தை சொந்தம் கொண்டாடுகிறது சீனா: தொடரும் அத்துமீறல்

திம்பு: தென் சீனக் கடலில் இருந்து லடாக் வரை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இப்போது பூட்டானில் உள்ள ஒரு புதிய நிலத்திற்கு உரிமை கோரியுள்ளது. உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலின் 58 வது கூட்டத்தில், பூட்டானில் உள்ள சாகடெங் வனவிலங்கு (Sakteng Wildlife Sanctuary) சரணாலயத்தின் நிலம் “சர்ச்சைக்குரியது” என்று சீனா விவரித்தது. இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை எதிர்க்க முயன்றது. சீனாவின் நடவடிக்கையை  கடுமையாக எதிர்த்ததுடன், இந்த நிலம் எங்கள் நாட்டுடன் […]

உய்கூர் முஸ்லிம் பெண்களுக்கு சீனாவில் கட்டாய கருத்தடை

பெய்ஜிங்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கூர் மொழி பேசுவோர் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் உய்கர் முஸ்லிம்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள், சீனாவில் சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர் உய்கூர் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த சீனா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை ஏற்றுக் கொள்ள மறுப்பவா்களுக்கு தண்டனைகள் அளிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. உய்கூர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொடா்ந்து பிரச்னை எழுவது போன்ற காரணத்தால் இந்த நடவடிக்கையை சீன […]

எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடி வானொலி மூலம் இன்று மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நிகழ்ச்சியில், இந்தியா தனது எல்லையையும், அதன் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது என்ற நிலையை உலகம் கண்டுள்ளது. லடாக்கில் நமது எல்லைக்குள் நுழைய முயற்சித்தவர்களுக்கு தக்கபதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு எப்போது நிறைவடையும் என மக்கள் பெரும்பாலானோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்ததாக உள்ளது என […]

லடாக் மோதலை அரசியல் ஆக்கக்கூடாது,ராகுலுக்கு சரத்பவார் குட்டு

லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் இரு தரப்பு வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியா சார்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே பெரும் வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது. சீனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டதாகவும், இந்திய பகுதிகளை சீனாவுக்கு தாரை வார்த்திருப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து […]