Tag: BJP

‘கருப்பர் கூட்டத்தை’ கூண்டோடு கைது செய்ய வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்

கந்த சஷ்டி கவச பாடல் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது இந்துக்கள் மனம் புண்படுத்தி உள்ளது என கூறி இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கூண்டோடு கைது செய்ய வலியுறுத்தி கோவை வடவள்ளியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு தடை; பாஜக புகார்

இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வரும் கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:நாத்திக கருத்துகளை பரப்புவது போல சிலர் கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் நடத்தி வருகின்றனர். அதில், ஆபாச புராணம் என்ற பெயரில் கந்தசஷ்டி கவசத்தை […]

காஷ்மீரில் பாஜக பிரமுகர் அவரது தந்தை மற்றும் சகோதரர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

காஷ்மீரின் வடக்கு மாவட்டமான பந்திப்போராவைச் சேர்ந்த ஷேக் வாசிம் பாரி, இவர் பாஜக மாவட்ட தலைவராக இருந்தவர். இவரது சகோதரர் உமர் சுல்தான் , தந்தை பஷீர் அகமது ஷேக். இவர்கள் அப்பகுதியில் கடை வைத்துள்ளனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் மூவரும் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

75% தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே – ஹரியானாவில் புதிய சட்டம்

ஹரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற புதிய மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் நிறுவனத்தை தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்களில், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குதான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நம் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் சட்டம் இருப்பதாக தெரியவில்லை. இதன் காரணமாக, சொந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பு பறிப்போவதாக பல்வேறு மாநிலங்களில் பரவலாக கண்டன குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு […]

கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க 3 மாதங்களில், தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கொரோனா (COVID-19) தொற்றுநோயை சமாளிக்க, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழகத்திற்கு இதுவரை மத்திய அரசு ரூ.6,600 கோடி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக-வின் தமிழ்நாடு பிரிவு தொண்டர்களுடன் மெய்நிகர் சந்திப்பில் பங்கேற்ற அவர், லடாக்கில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் ஹவில்தார் பழனிக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று கூறி தனது உரையை தொடங்கினார், அதில்    பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலானபாஜக […]