ஆஸ்திரேலிய ஊடகங்களில் வரும் செய்திகளின் அடிப்படையில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கவிருந்த T20 உலககோப்பைக் கிரிக்கெட் போட்டிகள், கொரோனா கொள்ளைநோய் பரவலின் காரணமாக தாமதமாகும். ஆஸ்திரேலிய பத்திரிக்கை இதுபற்றி எழுதும்போது கூடிய விரைவில் இந்த தள்ளிவைப்பு செய்தி வெளிவரும் என்று தெரிவித்திருக்கிறது.
கடந்த மாதம் உலக கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே T20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு தேதி எதுவும் குறிப்பிடாமல் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.