தென் சீனக் கடல் பகுதி முழுவதையும், சீனா தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என்று கூறுகிறது. மேலும் சமீபத்திய ஆண்டுகளில் சீனா அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அமெரிக்கா மீண்டும் சீனாவின் நடவடிக்கையை எதிர்த்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சனிக்கிழமையன்று பிராந்தியத்தில் வாஷிங்டனின் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது என்பதை வலியுறுத்தியதுடன், தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதி “சீனாவின் கடல் சாம்ராஜ்யம் அல்ல” என்றும் கூறினார். அதை எதிர்த்துப் போராட சுதந்திர நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்றும் அவர் சூசகமாகக் கூறினார்.
தென் சீனக் கடல் சீனாவின் கடல் சாம்ராஜ்யம் அல்ல. பெய்ஜிங் சர்வதேச சட்டத்தை மீறி வரும் நிலையில், சுதந்திர நாடுகள் ஒன்றும் செய்யாவிட்டால், சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை வரலாறு காட்டுகிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் சர்வதேச சட்டத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும், ”என்று மைக் பாம்பியோ ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.