சிங்கப்பூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, சிங்கப்பூரில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், இரண்டாம் கட்டமாக மேலும் தளர்த்தப்பட்டுள்ளன.
நேற்று(ஜூன் 19), ஷாப்பிங் மால், ஓட்டல்கள், சலுான்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், பல இடங்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. மக்கள், முக கவசம் அணிந்திருந்தனர். சமூக விலகல் நடைமுறையையும் பின்பற்றினர்.