செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா!

விழுப்புரம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,713 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செஞ்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவில் கொரோனா தொற்று பாதித்த நான்காவது எம்.எல்.ஏ, கே.எஸ்.மஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *