2,000 பேருக்கு புதிதாக பணி – பாரத ஸ்டேட் பேங்க் முடிவு

புதுடில்லி: இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிராமப்புற கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டை பணிகள் உள்ளிட்டவைகளுக்காக புதிதாக 2000 பேரை பணியமர்த்த முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வங்கிகள் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் SBI வங்கி புதிதாக 2000 பேரை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. அடுத்த 6 மாதங்களில் இளநிலை மற்றும் நடுத்தர மட்டத்தில் இந்த பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளது. வேளாண் கடன்கள் மற்றும் கிராமப்புற வங்கி செயல்பாடுகள் ஆகியவற்றில் அதிக அனுபவம் உள்ளவர்களுக்கு இதை முன்னுரிமை அளிக்கப்படும் என வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன.

அதே போல் கிரெடிட் கார்டு மார்க்கெட்டிங்கில் சிறிய நகரங்களையும் உட்படுத்தும் வகையிலும் இந்த பணிய நியமனம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பளத்தைப் பொறுத்தவரை இளநிலை பணியாளர்களுக்கு மாதம் ரூ 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *