கொரோனா பரிசோதனையில் மூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சியால் உயிரிழந்த குழந்தை

சவுதி அரேபியாவில் அப்துல்லா அசிஸ் அல் குபான் என்ற 18 மாத ஆண் குழந்தையை, தீவிர காய்ச்சல் காரணமாக அங்குள்ள ஷக்ரா பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதிக உடல் வெப்பநிலை காரணமாக குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் குச்சி, அதாவது மூக்கினுள் சளி மாதிரிகளை எடுக்கப் பயன்படும் குச்சியை குழந்தையின் மூக்கில் விடும்போது அது உடைந்துள்ளது.

டாக்டர்கள் மயக்க மருந்து செலுத்தி சிறிய அறுவை சிகிச்சை மூலம் குச்சியை அகற்றினர். ஆனால் குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, குழந்தை சுயநினைவை இழந்தது.

குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைவதை உணர்ந்த உறவினர்கள், குழந்தையை ரியாத் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கோரியுள்ளார். அனுமதி கிடைத்தும், ஆம்புலன்ஸ் வர தாமதமாகியுள்ளது. ஆம்புலன்ஸ் வருவதற்குள் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை உயிரிழந்தது தொடர்பாக, நிலைமையை தவறாக கையாண்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *