படங்களை மார்பிங் செய்து பெண்களை மிரட்டி பணம் பறிப்பு- 2 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரின் பிரத்யேக செல்போன் 94899 19722 எண்ணில் தொடர்பு கொண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களின் படங்களை மார்பிங் செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி வருகின்றனர். மேலும், அந்த பெண்களை மிரட்டி வீடியோ காலில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருகின்றனர். இவ்வாறு அந்த மோசடி நபர்களின் மூலம் பாதிக்கப்பட்ட தானும் மேற்கண்டவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.7லட்சத்து 50ஆயிரம் வரை பணத்தை கொடுத்துள்ளேன்.
இதன்பின்னரும் தொடர்ந்து தொந்தரவு செய்து மார்பிங் செய்த ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வருகின்றனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், மோசடி நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர் இன்ஸ்டாகிராம் மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது குற்றவாளிகள் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டபடிப்பு படித்து வரும் கீழக்கரையை சேர்ந்த முகம்மது முகைதீன் என்பவரின் தலைமையில் இயங்கி வந்தது தெரிந்தது.

ஜாசம் கனி

மேற்கண்ட முகம்மது முகைதீன் ஜெர்மனியில் படித்து கொண்டே இவ்வாறு செயல்பட்டு பல கோடி ரூபாய் மோசடி செய்து அதன் மூலம் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இந்த மோசடியில் துணைபுரியும் அவரின் நண்பர்களுக்கு கமிசனாக சிறிதளவு தொகை வழங்கி வந்துள்ளார். அவரின் வங்கி கணக்கில் இருந்து இது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜெர்மனியில் படித்து வரும் கீழக்கரை முகம்மது முகைதீன், புதுச்சேரி முகம்மது இப்ராகிம், சென்னை பாசித் அலி, நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசுல், நாகபட்டினம் முகம்மது ஜாசிம் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் கணக்குகளை தொடங்கி இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் என்பதை கண்டறிந்தனர்.

இதற்காக போலியான இன்ஸ்டாகிராம் கணக்குகளை தொடங்கி உள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசுல் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான முகம்மது முகைதீன் உள்ளிட்ட மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Source: Maalaimalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *