பணத்தை திருப்பி தராததால் பெண்ணை கடத்திய சம்பவம்: அமமுக நிர்வாகி கைது!

கமுதி: ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் போஸ் செல்வா 31. இவர் கமுதி பஸ் ஸ்டாண்டில் டீக்கடை நடத்தி வருகிறார்.இவருக்கு கமுதி வடமலை மகன் சூர்யாவிடம் 25, பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சூர்யா ரயில்வேயில் உணவகம், டூவீலர் நிறுத்துமிட குத்தகை வாங்கி தருவதாக கூறி போஸ் செல்வாவிடம் 32 லட்ச ரூபாய் பெற்று உள்ளார். சூர்யா எந்த கான்ட்ராக்ட்டும் பெற்று தராததால், போஸ்செல்வா பணத்தை கேட்டுள்ளார். பணத்தை கொடுக்காத தால் சூர்யா மனைவி துர்காவை 23, போஸ்செல்வா, நண்பர் மாரிச்செல்வம் இருவரும் சேர்ந்து கடத்தி, கமுதி பிள்ளையார்கோவில் தெரு போஸ்செல்வா வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

சூர்யா, ராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமாரிடம் புகார் கொடுத்தார். கமுதி போலீசார் போஸ்செல்வா, மாரிச்செல்வம் மீது ஆள் கடத்தல் வழக்கு பதிந்தனர். ரயில்வேயில் குத்தகை எடுத்து தருவதாக கூறி ஏமாற்றியதாக சூர்யா மீதும் வழக்கு பதிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *