ராஜபாளையம், திமுக எம்.எல்.ஏ, தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. இதில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 நாட்களுக்கு முன், எம்.எல்.ஏ.,வின் மனைவி, மகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மூவரும் குணமடைந்து வீடு திரும்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *