இந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்

பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர் சொகைப் அக்தர் தன்னுடைய பேட்டியில், எவ்வாறு பாக்கிஸ்தானில் பிறமதத்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதற்கு சான்றாக அநாட்டின் இரண்டாவது இந்துமதத்தைச் சேர்ந்த வீரர் டேனிஸ் கனேரியா மற்ற வீரர்களால் இஸ்லாம் அல்லாதவர் என்ற காரணத்திற்காகவே புறக்கனிக்கப்பட்டார் என்று கூறினார்.

சிறந்த வேகப்பந்து வீசாளாரன கனேரியாவுடன் பல வீரர்கள் பேசுவது இல்லை, அவருடன் உணவருந்துவதும் இல்லை, பல்வேறு கட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டதால் அவரால் தொடர்ந்து பாக்கிஸ்தான் அணியில் ஜொலிக்கமுடியவில்லை.

சொகைப் அக்தரின் பேட்டிக்கு பிறகு ஊடகங்களுக்கு பேட்டியளித்த கனேரியா, தான் பயத்தின் காரணமாக தனக்கு நேர்ந்த அவமானங்களை வெளியே தெரிவிக்கவில்லை என்றும், அக்தரின் பேட்டிக்கு பிறகு தான் இதுபற்றியை செய்திகளை வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். யார் யார் அவரை மதத்தின் காரணமாக இழிவுசெய்தார்கள் என்று தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஒரு உலக கிரிக்கெட் வீரருக்கே இந்த நிலை என்றால், ஒரு சாதாரன இந்து பாக்கிஸ்தானில் என்னிலையில் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று சொல்லவேண்டியதேயில்லை. அதனாலேயே மோடி அரசு, பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்கும் சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *