சென்னை: தமிகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கக்கூடிய நிலையில், செய்யூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ ஆர்.டி. அரசுவுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தி.மு.க. கட்சியின் 3வது எம்.எல்.ஏ ஆவார், ஏற்கனவே தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் உயிரிழந்த நிலையில், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல். ஏவான வசந்தம் கார்த்திகேயன் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசுவுக்கு கொரோனா உறுதி யெ்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்.