கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் பாமகவில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் பாமக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் கல்லூர் கே. சி. வெங்கடாசலம் தலைமையில், பாஜக மாவட்ட தலைவர் தர்மலிங்கம் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் புதன்கிழமை இணைந்தனர், உடன் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கலைவாணன் வழக்குரைஞர் கேசவன், சென்னையன் , சந்திர மௌலி, செல்வராஜ் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பாஜக ஒன்றிய தலைவர் சிவா, தெற்கு ஒன்றிய தலைவர் சங்கர், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயராமன், மாநில பொது குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட துணை தலைவர் நமச்சிவாயம், சக்தி கேந்திரா தொகுதி பொறுப்பாளர் மின்னல் சிவா, மாவட்ட மகளிரணி தலைவர் பத்மினி, மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் தனக்கோடி, மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் மாதவன், முன்னாள் நகர தலைவர் சரவணன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய பொது செயலாளர்கள் ராஜி, முருகேசன், துணை தலைவர்கள் ஜனார்த்தனன். கிரிதரன் ஜெயமனிகனேசன் மற்றும் கல்லூர் கிளை தலைவர் மயில், மோகன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Source – Dinamani