ராணுவ மருத்துவனையில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியானது. இதையடுத்து, இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், லடாக் பகுதியில் ராணுவ நிலைகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, முப்படைகளுக்கான தலைமை தளபதிமற்றும் ராணுவத் தலைமைத் தளபதிகளுடன் இன்று லடாக் பகுதிக்கு வருகை தந்தார். அப்போது, லே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *