பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சி ஒன்று ஹேக் செய்யப்பட்டு அதில் இந்திய தேசிய கொடியுடன் சுதந்திர தின வாழ்த்துகள் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் செய்தி சேனலான டான், ஞாயிற்றுக்கிழமை ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. டான் செய்தி சேனலில் விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது, இந்திய தேசியக் கொடி மீது ‘சுதந்திர தின வாழ்த்துகள்’ என்ற செய்தியுடன் தோன்றியது. அதைப் பார்த்து பல மக்கள் அதிர்ச்சி அடைந்து அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிடத்தொடங்கிவிட்டனர்.