ஒரு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு, அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜூன் 26 ஆம் தேதி ஒரு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..! உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜூன் 26 ஆம் தேதி ஒரு கோடி மக்களுக்கு பயனளிக்கும் வேலைவாய்ப்பை அறிவிக்கவுள்ளார். இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் மாறும். மற்றும் ஊரடங்கு காலத்தில் மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதன் மூலம் அதிக […]

துபாயில் இந்திய தம்பதியை கத்தியால் குத்தி கொன்ற பாக்,திருடன் கைது

துபாய் : துபாய் நகரின் அரேபியன் ரேஞ்சஸ் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹிரேன் ஆதித்யா-விதி ஆதித்யா தம்பதி. இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த இவர்கள் சார்ஜாவில் வர்த்தகம் செய்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு 13 வயது ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 18 ம் தேதி இரவு பாகிஸ்தானை சேர்ந்த நபர், வீட்டிற்குள் திருட நுழைந்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த ஹிரன் மற்றும் வித்தி, ஒருவர் […]

இந்திய ராணுவத்தை அவமதிக்கிறார் ராகுல்: சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு

போபால்: இந்தியா மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே கடந்த வாரம் திங்கட்கிழமை கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர் என செய்திகள் வெளிவந்தன.  எனினும் இதுபற்றி சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய […]

பீகாரில் லாலு பிரசாத் கட்சியில் இருந்து ஆளுங்கட்சிக்கு தாவிய 5 மேலவை உறுப்பினர்கள்

பாட்னா: பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்துது வருகிறது.  அங்கு சட்டசபை மேலவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்பாளர்களாக குலாம் கவுஸ், குமுத் வர்மா மற்றும் பீஷ்ம ஷானி ஆகியோரது பெயர்களை அக்கட்சி அறிவித்து உள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் அங்கம் வகித்து வரும் 5 மேலவை உறுப்பினர்கள் […]

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மெக்ஸிகோ:மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இந்திய நேரப்படி, இரவு 10 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ட்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் […]

ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு தமிழக ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி

சென்னை: லடாக் இந்திய – சீன ராணுவ மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 15ம் தேதி இரவு சீனா ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சீனா ராணுவம் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களில் தமிழகத்தின் […]

இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை, விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும்: அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

புதுடெல்லி: இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள். ஆனால், தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மக்காவுக்கு ஹஜ் பயணத்தில் […]

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுகொல்லப்பட்டனர்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், 2 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பண்ட்ஸூ என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று (ஜூன் 23) அதிகாலை, சி.ஆர்.பி.எப் 182வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள், போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதி, பாதுகாப்பு படையினர் மீது […]

சீன எல்லையில் 32 சாலை திட்டங்களை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு

புதுடில்லி: இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதல்களுக்கு மத்தியில், சீன – இந்திய எல்லையில் நடந்து வரும் சாலை திட்டங்களை மத்திய அரசு ஆய்வு செய்ததுடன், அவற்றில் 32 பணிகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்துறை அமைச்சகம் கூட்டிய உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் மத்திய பொதுப்பணித் துறை, எல்லை சாலைகள் அமைப்பு மற்றும் இந்தோ – திபெத்திய எல்லைக் காவல்துறை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக […]

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

பிரேசில்: உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 641 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து இங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50,617 ஆக உள்ளது.