நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று

நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பரிசோதனை  முடிவுகள் பாஸிட்வ் என்று அமிதாப் பச்சன் ட்வீட் செய்து தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்று அமிதாப் தெரிவித்துள்ளார்.கடந்த 10 நாட்களாக தன்னுடன் தொடர்பு கொண்டவர்களும், கொரோனா பரிசோதனையை செய்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  அமிதாப் பச்சனும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மகனும் நடிகருமான அபிஷேக் இருவரும் மும்பையில் உள்ள […]

பிரேசிலில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 968 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் 2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் 24 மணி நேரத்தில் 968  பேரின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. இதனால் அந்த நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 71,492  ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், பிரேசிலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  18,40,812 ஆக உயர்ந்துள்ளது.

தாய் நாட்டிற்காக உயிர்நீத்த மாவீரன் அழகுமுத்துக்கோனை நினைவுகூர்ந்து வணங்கி போற்றுவோம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வீரம் என்ற சொல்லுக்கு அர்த்தமாக என்றும் விளங்கும் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்கள் நமது தாய்நாட்டிற்காக உயிர்நீத்த தினம் இன்று. அந்த மகத்தான தியாகியை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கி போற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

கொரோனா சிகிச்சையில் “இட்டோலிசுமாப்” மருந்தினை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி

கொரோனா சிகிச்சையில் ‘இட்டோலிசுமாப்’ மருந்தினை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் உயரிழப்புகள் நாடு முழுவதும் தொடர்ந்து இருந்து வருகிறது. உயிரிழப்புகளை தவிர்க்க கொரோனா சிகிச்சையின் போது வெவ்வேறு மருந்துகள் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சொரியாஸிஸ் நோய் சிகிச்சைக்கு பயன்படும் இட்டோலிசுமாப் மருந்தை தீவிர மற்றும் மிதமான பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு அவசர சூழல்களில் கட்டுப்பாடுடன் பயன்படுத்த இந்திய […]

இந்தியாவிடம் உலகம் கற்றுக்கொள்ள வேண்டும் – இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்ற “இந்தியா குளோபல் வீக்” என்னும் இந்திய உலகளாவிய வார உச்சி மாநாட்டில், அந்த நாட்டின் இளவரசர் சார்லஸ், காணொலி காட்சி வழியாக பங்கேற்று பேசினார். அப்போது அவர், இந்தியாவின் நிலையான வாழ்க்கை முறையை புகழ்ந்துரைத்தார். நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகையில் அவர் கூறியதாவது.. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியில் […]

ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் – அதிரடி ஆஃபரை வழங்கிய பிலிப்பைன்ஸ் நாடு!

கொரோனா தொற்றால் அத்தியாவசிய பொருட்கள் தவிர பிற பொருட்களை வாங்கும் நிலையில் மக்கள் இல்லை. வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு போன்ற காரணங்களால் பணத்தை சிக்கனமாக செலவு செய்யவே விரும்புகின்றனர். இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் அடிவாங்கி இருக்கின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கார் வாங்கினால் இன்னொரு கார் இலவசம் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த அறிவிப்பின்படி ஹூண்டாயின் Santa Fe சொகுசுக் காரின் விலை இந்திய மதிப்பில் […]

பயங்கரவாத அமைப்புகளுக்கு வசதிகள் செய்து தரும் பாகிஸ்தான் – இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் படி அந்நாட்டிடம் உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா.வில் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த கலந்துரையாடல் காணொலி மூலம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய மூத்த அதிகாரி மஹாவீர் சிங்வி பாகிஸ்தான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: மனித உரிமைகளை பாதுகாத்து அதை நிலைநிறுத்துவதற்கு […]

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு அமெரிக்காவும் தடை

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனம், அமெரிக்காவிற்கு விமானங்களை இயக்குவதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சர்வதேச விமான போக்குவரத்தில் ஐரோப்பிய யூனியன், பாகிஸ்தானிய விமான சேவையான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தை சமீபத்தில் தடை விதித்தது. பாகிஸ்தான் விமான சேவையில் பணியாற்றும் விமானிகள், விமான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முறைகேடான வழியை பின்பற்றியதை பாகிஸ்தான் அரசு கண்டறிந்தது. இந்நிலையில் இந்த முடிவினை ஐரோப்பிய […]

தமிழக முதல்வர் K. பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கவுரவம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவப்படுத்தி உள்ளது அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு “paul harries fellow” என முதல்வர் பழனிசாமியை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “அமெரிக்காவில் சிகாகோவில் தலைமையகமாக இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய் சேய் […]

வந்தே பாரத் திட்டம் மூலம் 5.80 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசு தகவல்

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை விமானம் மூலம் அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத்  திட்டத்தை செயல்படுத்தியது. இதுவரை 3 கட்டத் திட்டங்கள் முடிந்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகளில் இருந்த இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் இது தவிர கடல்மார்க்கமாக சமுத்திர சேது திட்டமும் செயல்படுத்தப்பட்டு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் 3 கட்ட வந்தே […]