மோடி மற்றும் அமித்ஷாவை முஸ்லீம்கள் கொலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த நெல்லை கண்ணன் கைது.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா ஆகியோரை இன்னும் கொலைசெய்யாமல் வைத்திருக்கிறீர்கள் என்று முஸ்லீம்களிடம் ஆதஙகப்பட்ட நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றோரை ஏன் நீங்கள் இன்னும் சோலியை முடிக்காமல் இருக்கிறீர்கள் என்று ஆதஙகப்பட்டார். நெல்லை கண்ணன் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து நெல்லைக் கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

நெல்லை கண்ணனை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினர், பாஜகவின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் காவல் துறையில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாஜக தேசிய செயலாளர் H.ராஜா தலைமையில் சென்னை மெரினாவில் போராட்டமும் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *