ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: கடந்த சில தினங்களாக லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ரஷியாவிடமிருந்து ரூ. 18,148 கோடிக்கு 33 புதிய போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதுபற்றி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்ததாவது: “12 சுகோய்-30 எம்கேஐ மற்றும் 21 மிக்-29எஸ் என 33 புதிய போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மொத்த மதிப்பீடு ரூ. 18,148 கோடி.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய நாட்டு அதிபர் விளாமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றிப் பெற்ற 75 ஆண்டு நிறைவு விழாவுக்கும், ரஷ்யாவில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு வாக்களிப்பது வெற்றிகரமாக நிறைவேறி உள்ளதற்கும் பிரதமர் மோடி, புதினுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *