சொத்து வரி வசூலை சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னையில் பணியாற்றிய பலரும் சொந்த ஊர் சென்றுள்ள நிலையில் சொத்து வரியை வருகிற 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவித்திருப்பதைத் திரும்பப் பெற வேண்டும். சொத்து வரி வசூலை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீடிக்கின்ற நிலையில், “நிலுவையில் உள்ள மற்றும் இந்த ஆண்டிற்கான சொத்து வரியை உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி செலுத்த வேண்டும்” என்று சென்னை மாநகராட்சி சார்பில் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது

கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையிலிருந்து வெளியூர் போனவர்கள் திரும்பி வரவில்லை. வேலை, தொழில், சுய தொழில், வியாபாரம் உள்ளிட்ட அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளார்கள். தங்கள் வாழ்க்கையை “இனி ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டுமோ” என்ற மிகப்பெரிய அச்சத்தில் சென்னைவாசிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக, சென்னை மாநகராட்சி இந்த வரி வசூலை குறைந்தபட்சம் இன்னும் ஆறு மாதத்திற்காவது தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார். 

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *