மகேந்திரகிரி, இஸ்ரோ ஊழியருக்கு கொரோனா: இஸ்ரோ மையம் மூடல்

நெல்லை: நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது. அதில் நிரந்தர ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் நாகர்கோயில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடைய 50 க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து இன்றும், நாளையும் விண்வெளி ஆராய்ச்சி மையம். மூடப்பட்டு கிறுமி நாசினி மருந்து தெளிக்கப்பட இருக்கிறது. அத்தியவாசிய பணிகள் மட்டும் தங்கு தடையின்றி நடைபெறும் என்று இஸ்ரோ மைய நிர்வாக அலுவலர் சுப்பிரமணியபிள்ளை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *