மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்ச் – மே மாதங்களில் மட்டும் 206 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 206 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொரோனா வைரசால் ஊரடங்கு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் பெரும்பாலான விவசாயிகள் மே மாதத்தில் தான் அதகளவில் தற்கெலை செய்து கொண்டுள்ளனர்.

அதே போல் அமரவாதி பகுதியை சேர்ந்த விவசாயிகள 2017-2019 ஆண்டுகளில் சுமார் 3,171 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சமூக ஆர்வலரான அபய் கோலர்கர் தாக்கல் செய்திருந்த தகவல்அறியும் உரிமைசட்டத்தின் கீழ் அமராவதி பகுதி ஆணையர் இதை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து மார்ச் மாதத்தில் 55, ஏப்ரலில் 48, மே மாதத்தில் 103 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *