முடிந்தால் அரசை கவிழ்த்து காட்டுங்கள் என பாஜகவுக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் உத்தவ் தாக்கரே கூறி இருப்பதாவது: இந்தியாவில் சீன நிறுவனங்கள் வர்த்தகம் செய்யலாமா என்பது குறித்து பிரதமர் மோடி கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.
ஆட்டோ ரிக்ஷா போன்றது எனது ஆட்சி. அதன் கைப்பிடி என்னிடம் இருக்கிறது. கூட்டணி கட்சிகள் காங்., தேசியவாத காங். ஆகியவை பின்புறம் அமர்ந்துள்ளன. கூட்டணிக்குள் சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளதால் அரசும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த அரசு ஜனநாயகத்துக்கு எதிராக ஆட்சி அமைத்துள்ளது என விமர்சனம் வைக்கிறீர்கள். அப்படி என்றால் அரசை கவிழப்பது மட்டும் ஜனநாயகமா? முடிந்தால், அரசை இப்போதே கவிழ்த்து காட்டுங்கள் பார்ப்போம் என்று கூறி உள்ளார்.