மதுரை : பாஜக பிரமுகர் வீட்டிற்கு சென்று தாக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ மூர்த்தி

மதுரை: மதுரை பாஜக இளைஞர் அணி நிர்வாகி வீட்டிற்கு திமுக எம். எல். ஏ மூர்த்தி சென்று தாக்க முயன்றதாக சி சி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மதுரை பாஜக இளைஞர் அணி கோட்ட பொறுப்பாளர் சங்கரபாண்டி ஊமச்சிகுளத்தில் வசிக்கிறார். அவரது வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற மதுரை கிழக்கு சட்டமன்ற திமுக எம். எல். ஏ. மூர்த்தி, தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களையும், ஊழல் செய்துள்ளதாக தகவல்களை பரப்பியதாகவும் கூறி சங்கரபாண்டியையும் அவரது மனைவியையும் தாக்க முயன்ற   சி.சி.டிவி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

மூர்த்தி தனது காலனியை கழற்றி தாக்க முயலும் சம்பவமும் நடைபெற்றுள்ளது. இந்த காட்சிகள் சங்கரபாண்டி வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி சங்கரபாண்டி கூறுகையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் செய்த ஊழலை நேர்மையான முறையில் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாக கூறினார். அதற்காக தன்னை தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *