“மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு” 162 தொழிலாளர்கள் பரிதாப பலி – சோகத்தில் மூழ்கியது மியான்மர்

மியான்மர் நாட்டில் பச்சை மரகத கல்லை வெட்டி எடுக்கும் ஜாட் சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியான தொழிலாளர்கள் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது, பலர் இடிபாடுகளில் சிக்கி இருந்ததால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்து வந்தது. கனமழை காரணமாக ஏற்கனவே குறித்த நிலப்பகுதி ஈரமாக இருந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் குவியல் குவியலாக தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி ஈடுபட்டு வந்தனர். மீட்கப்பட்ட பல தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில் இந்த விபத்தில் 162 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால் மியான்மர் நாட்டில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *