கேரள மாநிலத்தில் கொரோனா பரவலையடுத்து ஓராண்டுக்கு பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ 10 ஆயிரம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது, சமூக இடைவெளி கடைப்பிடித்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும் இறுதிச் சடங்குகளில் 20 பேரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளில் 25 பேருக்கு மேல் நிற்க அனுமதி கிடையாது. வணிகர்கள் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்கி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகள், மளிகை, காய்கறி, பால் போன்ற அத்யாவசிய பணிகளுக்கு மட்டும் திருவனந்தபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.