கேரள தங்கக் கடத்தல் வழக்கு: துபாயில் பைசல் பரீத் கைது

கேரளா தங்க கடத்தல் வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் பைசல் பரீத் ஏன்பவர் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியது தெரிய வந்தது. 

இது தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினரான சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிகாரிகள் கைது செய்ததை தொடர்ந்து என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை  21-ம் தேதி வரை காவலில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோன்று ஸ்வப்னாவின் தோழியிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  அது, ஸ்வப்னா கொடுத்து வைத்திருந்த பணம் என சுங்கத்துறை தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *