“கறுப்பர் கூட்டம்” சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண்

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மீது பாஜக சார்பில், இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். புதுச்சேரியில் சரண் அடைந்துள்ள சுரேந்திரனை  சென்னை அழைத்து வர தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.

முன்னதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வந்த விசாரணையில் நேற்று இரவு கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *