இந்துக்களுக்கு எதிரான கருப்பர் கூட்டம் பின்னணியில் தி.மு.க

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து, கருப்பர் கூட்டம் வெளியிட்ட, யு டியூப் வீடியோ விவகாரத்தில் கைதாகியுள்ள செந்தில்வாசன், தி.மு.க வின் தகவல் தொடர்பு பிரிவு நிர்வாகியாக இருக்கும்  என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில், இந்துக்களின் மனம் புண்படும்படியாக, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. சமீபத்தில், முருகப் பெருமானை போற்றி பாடும், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டது.இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்து அமைப்புகளும், இந்து மக்களும், இந்த கும்பலுக்கு எதிராக கொந்தளித்தனர்.

இதையடுத்து, கருப்பர் கூட்டத்தினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, பல்வேறு தரப்பினரும், போலீசில் புகார் அளித்தனர். தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவினரும் மற்றும் இந்து அமைப்பினரும், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர்.

கருப்பர் கூட்டம், யு டியூப் சேனல் நிர்வாகிகளான, சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த, செந்தில்வாசன், 49; போரூர், சுரேந்தர் நடராஜன், 36, உள்ளிட்ட, நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில்வாசனை, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, மூன்று நாட்கள் காவலில் எடுத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.அவர் தான், கருப்பர் கூட்டம், யு டியூப் சேனலின் முக்கிய நிர்வாகி என்பதும், செந்தில்வாசன் தலைமையில், மிகப்பெரிய கும்பல் செயல்பட்டு வருவதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், செந்தில்வாசன், தி.மு.க.,வின் ‘ஐ.டி., அணி’ எனப்படும், தகவல் தொடர்பு பிரிவில் முக்கிய பொறுப்பில் இருப்பது, அம்பலமாகி உள்ளது; இதை, ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். இதனால், இவர்களுக்கு பின்னணியில், தி.மு.க., இருப்பது உறுதியாகி இருப்பதாக, போலீஸ் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சதி திட்டம்வெளிநாடுகளில் இருந்து, இவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறதா; இவர்களின் சதி திட்டம் என்ன? தொடர்ந்து இந்துக்களின் மனம் புண்படும்படி, வீடியோ வெளியிட்டதன் பின்னணி என்ன; அதை ஊக்கப்படுத்தியவர்கள் யார் என்பது குறித்தெல்லாம், செந்தில்வாசனிடம், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.செந்தில்வாசன் மற்றும் அவரது கூட்டாளிகளின் வங்கி கணக்கு இருப்பு விபரங்களையும், போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *