கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே குருபுரா பங்களகுடேயில் கடந்தசிலதினங்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று மதியம் நேரத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் வீடுகள் பலத்த சேதமடைந்தன. இதில் 10 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பலியாயினர். மற்றவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனயைடுத்து அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி மற்றும் நலின் குமார் கட்டீல் எம்.பி துணை ஆணையர் சிந்து பி.ரூபேஷ் உள்ளிட்டோர் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே நிலச்சரிவில் சிக்கி பலியான இரண்டு சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்து உள்ளார்.