ஜூம் செயலிக்கு பதிலாக களமிறங்கிய ஜியோ மீட்

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீடித்து வருகின்றது. இதனால், பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்கள், வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வழியாக பாடங்களை பயிற்றுவிக்கின்றன.

இதற்காக, Zoom, Google Hangout போன்ற தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன. வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு போன்ற பாதுகாப்பின்மை காரணமாக ஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது.இந்த நிலையில், வீடியோ கான்பரன்சிங் சேவைக்கான பிரத்யேக செயலியை ஜியோ வெளியிட்டுள்ளது. ‘ஜியோ மீட்’ என்ற பெயரிலான இந்த செயலி, கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் மற்றும் வின்டோஸ் மார்கெட்டில் கிடைக்கும்

முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் ஜியோ மீட் தயாராகியுள்ளது. மற்ற வீடியோ கான்பரன்சிங் தளங்களை விட, ஜியோ மீட் பிரத்யேக அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 100 பேர் வரை இந்த செயலி மூலம் உரையாட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *