சீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்

அமெரிக்காவைத் தொடர்ந்து தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக ஜப்பானும் களமிறங்கி யுள்ளது. சீனாவை எதிர்க்கும் வகையில் இந்தியா, – ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகள் கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டு இருக்கின்றன. இன்னும் பல்வேறு இராணுவ ரீதியான திட்டங்களை இரண்டு நாடுகளும் செயல்படுத்த உள்ளன.

இந்தியா_ சீனா இடையே லடாக் எல்லையில் நிலவி வரும் மோதலில் இந்தியாவிற்கு ஆதரவாக பெரிய நாடுகள் களம் இறங்க உள்ளன. இந்திய எல்லையில் இருக்கும் நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு எதிராக இருக்கும் நிலையில் மற்றைய வல்லரசு நாடுகள் இந்தியாவிற்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.

“இந்தியாவிற்கு ஆதரவாக போர்ப் படைகளை அனுப்புவோம், சீனா எங்கெல்லாம் பிரச்சினை செய்கிறதோ அங்கெல்லாம் படைகளை அனுப்புவோம்” என்று அமெரிக்கா வெளிப்படையாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக ஜப்பான் படைகளை அனுப்ப உள்ளது. முதற்கட்டமாக அதற்காக இந்தியா_ – ஜப்பான் இடையே கடற்படை ரீதியான கூட்டுப் பயிற்சி நடந்துள்ளது. இரண்டு நாட்டு கடற்படைகளும் சேர்ந்து இந்திய பெருங்கடலில் கூட்டாக பயிற்சி நடத்தி இருக்கின்றன. கடந்த மூன்று வாரமாக திட்டமிடப்பட்டு இந்தப் பயிற்சி நடந்தது. இரண்டு நாட்டின் நவீன போர்க் கப்பல்களும் இந்த கூட்டு பயிற்சியில் இடம்பிடித்தன.

இது சீனாவிற்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. டோக்லாம் பிரச்சினையின் போதே ஜப்பான் இந்தியாவிற்குதான் ஆதரவு அளித்தது. அதேபோல் கல்வான் சண்டையிலும் கூட இந்திய வீரர்களின் வீரமரணத்திற்கு ஜப்பான் இரங்கல் தெரிவித்து இருந்தது. அதோடு ஜப்பான்_-சீனாவிற்கு இடையே கிழக்கு சீன கடல் எல்லையில் எல்லை பிரச்சினை நிலவி வருகிறது.

அங்கு ஜப்பான் கடல் எல்லைக்குள் சீனாவின் கப்பல்கள் அத்துமீற தொடங்கி உள்ளன. 2013க்கு பிறகு சீனாவின் போர்க் கப்பல்களும் ஜப்பான் அருகே அத்துமீற தொடங்கி உள்ளன. இதனால் ஜப்பானும் சீனா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. அதேபோல் சேனகாகு தீவுகளில் ஜப்பான் — சீனா இடையே கடுமையான முறுகல் நிலவி வருகிறது. இதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், லடாக்கில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல் பற்றி, கூறியிருப்பதாவது:லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும்

லடாக் எல்லைப் பிரச்னை பற்றி, இந்திய வெளியுறவு செயலர், ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவுடன் நடத்திய பேச்சு, திருப்திகரமாக இருந்தது. எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் இந்திய முயற்சிகளை, சீனா ஏற்க வேண்டும்.இந்திய மற்றும் ஜப்பானிய கடலோர காவல் படையைச் சேர்ந்த ரோந்து கப்பல்கள், கடந்த, 27ம் தேதி, இந்திய பெருங்கடலில், இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது மகிழ்ச்சிஅளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *