2020 இறுதிவரை டாக்டர், நர்சுகளுக்கு 25% விமான கட்டண சலுகை : இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

டெல்லி : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கும் மிகப் பெரிய சேவையில், நாடு முழுதும் உள்ள டாக்டர்கள், நர்சுகள் ஈடுபட்டு வருகின்றனர். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் இவர்களில் சிலருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர், தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் முன்கள வீரர்களாக செயல்படும் டாக்டர் மற்றும் நர்சுகளை கவுரவிக்கும் விதமாக இந்தாண்டு இறுதிவரை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 25% விமான கட்டண சலுகை வழங்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இண்டிகோ நிறுவனம் கட்டண சலுகை வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *